வேண்டாமே கலர்ஃபுல் உணவுகள்!

3 months ago 22

உணவுப் பொருட்களை உண்ணும் ஆசையை தூண்டிவிடவும், அவற்றில் கவர்ச்சிக்கரமான வண்ணநிறமிகள் சேர்க்கப்படுகின்றன.பல இடங்களில் பானிபூரியில் கூட கவர்ச்சிகரமாக இருக்கும் வகையில் அவற்றில் நீலம், மஞ்சள் மற்றும் ரசாயன நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. இந்த நிறமிகள் பொதுவாக நீரில் ஒரு சாயமாக பயன்படுத்தப்படுகின்றன.என்னதான் சாப்பிடக்கூடிய நிறங்கள் என்றாலும் எதிலும் ஒரு அளவு உண்டு. இது உயிரணு இறப்பு மற்றும் சிறுமூளை, மூளை தண்டு, சிறு நீரகம், கல்லீரல் திசுக்களை சேதப்படுத்தும். மேலும் இது புற்றுநோயை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி, குக்கீஸ்கள், வறுத்து பொரித்து பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அனைத்து உணவுகளிலும் இது போன்ற புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்களான சோடியம் நைட்ரேட், ஒலெஸ் ட்ரா என்னும் உணவு சந்து குறைக்கும் திரவம், ப்ரோமினேடட் வெஜிடேபிள் எண்ணெய் என்றும் நரம்பியல் கோளாறை உருவாக்கும். தாவர எண்ணெய், மாவுப் பொருட்களை நொதிக்க வைக்க உதவும் பொட்டாசியம் பிரோமைடு, குளிர்ப்பானங்களை கெடாமல் வைக்கும் பொட்டாசியம் பிரட்டிலேடட் ஹைட்ராக சினியால் என்னும் உணவை நீண்டகாலம் கெடாமல் வைக்கும் ரசாயன போன்றவை கலக்கப்படுவதாக உணவு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கண்ணுக்குத் தெரியாத இந்தவகை ரசாயனங்கள் மனிதர்கள் உண்ணும் உணவின் சத்துக்களை உடலில் சேரவிடாமல் தடுப்பதுடன் குடல் சார்ந்த பலவகை நோய்களை உருவாக்குகின்றன.பல நாடுகள் தற்போது இந்த வகை சாயங்கள் கலந்த உணவுகளை தடைசெய்ய வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கு மாற்றாக காலிபிளவர், பூண்டு, மஞ்சள், பச்சைமிளகாய், கறிகள், தக்காளி போன்றவை புற்றுநோயை தடுக்க உதவுவதால் அவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் பாதிப்பை தடுக்கலாம் என்றும் பரிந்துரைக்கின்றனர்.
– அ.ப. ஜெயபால்

The post வேண்டாமே கலர்ஃபுல் உணவுகள்! appeared first on Dinakaran.

Read Entire Article