
பர்மிங்காம்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கடந்த 29-ம் தேதி நடைபெற்றது. இதில் ம 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.