தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்

7 hours ago 4

மதுரை,

திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம் கோட்டம்

தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட திருவனந்தபுரம் கோட்டத்தில் நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக அந்தந்த பகுதிகளில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22627) வருகிற 9-ந்தேதி வள்ளியூர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.22628) வருகிற 9-ந்தேதி வள்ளியூரில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்படும்.

தாம்பரத்தில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை இயக்கப்படும் அந்தியோதயா ரெயில் (வ.எண்.20691) வருகிற 8-ந் தேதி மற்றும் 9-ந் தேதிகளில் நெல்லை வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதயா ரெயில் (வ.எண்.20692) வருகிற 9-ந்தேதி நெல்லையில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்படும்.

அம்ரிதா, குருவாயூர் எக்ஸ்பிரஸ்

மதுரையில் இருந்து தென்காசி வழியாக இயக்கப்படும் மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16327) வருகிற 26-ந்தேதி கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16328) வருகிற 27-ந்தேதி கொல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்படும்.

திருவனந்தபுரத்தில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி வழியாக மதுரை வரை இயக்கப்படும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் (வ.எண்.16343) வருகிற 26-ந்தேதி மாவேலிக்கரை, செங்கன்னூர், திருவல்லா, செங்கனச்சேரி, கோட்டயம் வழியாக செல்வதற்கு பதிலாக ஆலப்புழை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். அதாவது இந்த ரெயில் ஹரிப்பாடு, அம்பாலப்புழை, ஆலப்புழை, சேர்தலா, எர்ணாகுளம் வழியாக திருவனந்தபுரம் செல்லும்.

மதுரை-புனலூர் ரெயில் (வ.எண்.16729) வருகிற 7-ந்தேதி மதுரையில் இருந்து அரை மணி நேரம் தாமதமாக புறப்படும்.  

Read Entire Article