
பாரீஸ்,
பிரான்சில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமான போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விமான சேவைகளை 40 சதவீதம் அளவுக்கு குறைக்குமாறு பிரான்ஸ் விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தியது.
அதன்பேரில் ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமான ரியான் ஏர் 170 விமானங்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் இங்கிலாந்து, கிரீஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்குச் செல்லும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என ரியான் ஏர் விமான போக்குவரத்து நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.