சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 1 பவுன் நகை பறிப்பு

7 hours ago 4

பாலக்காடு,

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வண்டித்தாவளம் அருகே மருதம்பாறை பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 82). இவர் ஆதார் கார்டை புதுப்பிப்பதற்காக வண்டித்தாவளம் நகருக்கு வந்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கைதறவு பகுதியில் வந்த போது, ஸ்கூட்டரில் வந்த ஒருவர் லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் நகையை பறித்து விட்டு தப்ப முயன்றார்.

இதனால் லட்சுமி சத்தம் போட்டு உள்ளார். இதை கேட்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து அந்த நபரை துரத்தி பிடித்து மீனாட்சிபுரம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் நந்தியோடு ஏந்தல்பாளம் பகுதியை சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான அனில்குமார் (45) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.  

Read Entire Article