வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேசம் 269/9

2 hours ago 2

ஆண்டிகுவா,

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 450 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜஸ்டின் 115 ரன்கள் சேர்த்தார். லூயிஸ் 97 ரன்கள் சேர்த்தார்.

வங்காளதேச தரப்பில் அந்த அணியின் ஹசன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், தஸ்கின் அகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய வங்காளதேசம் 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜகர் அலி 53 ரன்களும், மொனிலுல் 50 ரன்களும் எடுத்துள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்சாரி ஜோசப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்காளதேச அணியில் 181 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது.

Read Entire Article