அர்ஜுன் அசோகன் நடித்துள்ள படத்தின் டிரெய்லர் வெளியீடு

2 hours ago 1

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அர்ஜுன் அசோகன். இவர் 'ஜுன், மந்தாரம்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் படம் 'ப்ரோமான்ஸ்'. இந்தப் படத்தை அர்ஜுன் டி.ஜோஸ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் மேத்யூ தாமஸ், மகிமா நம்பியார், சியாம் மோகன், சங்கீத் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை அருண், ரவீஷ் நாத் மற்றும் தாமஸ் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்த படத்தை ஆசிக் உஸ்மான் தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படம் வருகிற 14-ந் தேதி காதலர் தினத்தில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெயலர் வெளியாகி உள்ளது. அதாவது, தொலைந்துப் போன அண்ணனை தேடும் பணிகளில் ஈடுப்படும் போது அவர்கள் சந்திக்கும் எதிர்ப்பாராத பிரச்சனைகள் போன்ற காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளன. 

Read Entire Article