சென்னை,
பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு, வாரிணி தம்பதியின் மகன் சாய் அபயங்கர். இவர் 'கட்சி சேர' என்ற பாடலை பாடி, இசையமைத்து வெளியிட்டார். இந்த பாடல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது.
அதனை தொடர்ந்து 'ஆச கூட'என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இதனால் அவருக்கு லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்திற்கும் இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் 'கட்சி சேரா, ஆச கூட' பாடல்களின் வரிசையில் சாய் அபயங்கரின் 3-வது இண்டிபெண்டண்ட் பாடலான 'சித்திரபுத்திரி' என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.