வெளியானது 'தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்' டிரெய்லர்

1 day ago 1

சென்னை,

இந்தியாவில், ஹாலிவுட் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஹாலிவுட்டில் மார்வெல், டிசி நிறுவனங்களின் கீழ் பல்வேறு சூப்பர் ஹீரோ படங்கள் உருவாகி வருகின்றன.

அதிலும் குறிப்பாக, மார்வெல் படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். இதற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில், தற்போது மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 'தி பென்டாஸ்டிக் போர்: பர்ஸ்ட் ஸ்டெப்ஸ்' .

இதனை மேட்ஷாக்மேன் இயக்குகிறார். இதில், பெட்ரோ பாஸ்கல், வனேசா கிர்பி, ஜோசப் குவின், எபோன் மோஸ்-பச்ராச் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற ஜூலை மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளநிலையில், இப்படத்தின் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இதில், படத்தின் வில்லனை படக்குழு வெளியிட்டுள்ளது. அது வேறு யாருமில்லை, சில்வர் சர்பர் என்று அழைக்கப்படும் ஷல்லா பால்தான்.

Together. As a family.Marvel Studios' #TheFantasticFour: First Steps arrives in theaters July 25. pic.twitter.com/oOIwzHshFk

— Marvel Entertainment (@Marvel) April 17, 2025
Read Entire Article