இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இல்லை - டிம் டேவிட் பேட்டி

9 hours ago 3

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பெங்களூரு தரப்பில் டிம் டேவிட் 50 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சென், சாஹல், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 33 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது டிம் டேவிட்டுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டம் முடிவடைந்த பின்னர் டிம் டேவிட் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, உண்மையிலேயே இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இல்லை. டாப் ஆர்டரில் பேட்டிங் செய்த வீரர்கள் என்னிடம் வந்து மைதானத்தில் உள்ள சவாலை பகிர்ந்தனர்.

இந்த ஆடுகளத்தில் அப்படி என்ன நடக்கிறது என்பதை பார்த்தேன். பயிற்சியில் ஈடுபடும் பிட்ச் போன்று தான் இந்த ஆடுகளமும் இருந்தது. இந்த ஆட்டத்தில் நான் சிறப்பாக விளையாடியதாக உணர்கிறேன். ஆனாலும் நான் ஆர்.சி.பி அணிக்காக முன்கூட்டியே டாப் ஆர்டரில் இறங்கினால் என்னுடைய மிகச் சிறப்பான பங்களிப்பை என்னுடைய அணிக்காக வழங்க முடியும் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article