ஏழாயிரம்பண்ணை : வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் பானை ஓடுகளை தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.
உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, தங்க அணிகலன்கள், சுடுமண் பானை, கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்ட பொருட்கள் மூன்றாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் தோண்டப்பட்ட 13வது குழியில் சிறிய அளவிலான தங்கத்தால் ஆன குண்டுமணி கண்டெடுக்கப்பட்டது.
அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தினசரி அதிகளவில் உடைந்த சுடுமண் பானைகள் கிடைத்து வருகின்றன. இவற்றை சுத்தம் செய்து தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது குறித்து முழு ஆய்வு செய்த பின்பு தெரிய வரும் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் பானை ஓடுகள் தரம் பிரிப்பு appeared first on Dinakaran.