தேவையான பொருட்கள்:
சோம்பு – ¼ டீ ஸ்பூன்
பட்டை – சின்ன துண்டு
கல்பாசி – சிறிதளவு
ஏலக்காய் -2
பிரியாணி இலை – 1
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீ ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
மிளகுத்தூள் – ¼ டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
புதினா – ஒரு கைப்பிடி
கேரட் – 2
பீன்ஸ் – 10
உருளைக்கிழங்கு – 2
பச்சை பட்டாணி – 1ஒரு கைப்பிடி
அரைக்க:
சோம்பு – ½ ஸ்பூன்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பட்டை – சின்ன துண்டு
கல்பாசி – சிறிதளவு
பிரியாணி இலை – 1
பெரிய வெங்காயம் – 1
பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
நிலக்கடலை – 50 கிராம்
கசகசா – 1
பச்சை மிளகாய் – 2
முந்திரி – 10
தேங்காய் – ½ மூடி
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.காய்கறிகளை சுத்தமாக கழுவி உங்களுக்கு விருப்பமான அளவில் நறுக்கி கொள்ளவும்.உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்.வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் சேர்க்கவும்.எண்ணெய் காய்ந்ததும் சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, கல்பாசி மற்றும் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும்.அதனுடன் கசகசா, நிலக்கடலை, பொட்டுக்கடலை, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக சிவக்கும் படி வறுத்து கொள்ளவும்.அதில் முந்திரி, தேங்காய், மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக வதக்கி அடுப்பை அணைக்கவும்.பின் நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.அதே வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து காய விடவும்.பின் அதில் சோம்பு, பட்டை, கல்பாசி, ஏலக்காய், மற்றும் பிரியாணி இலை சேர்த்து பொரிய விடவும்.பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.அதில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் புதினா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் மல்லித்தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் நன்றாக வதக்கவும். அதனுடன் அரைத்து வைத்த பொருட்களை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.நன்றாக கொதித்து எண்ணெய் பிரித்து வரும் போது மிளகுத்தூள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.இட்லி, தோசை, மற்றும் இடியாப்பத்திற்கு சுவையான வெஜ் பாயா தயார்!