வீர தீர சூரன்' படத்தின் டீசர் நாளை வெளியீடு

4 months ago 14

சென்னை,

'சேதுபதி, சித்தா' படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62 - வது படமான 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு. துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலாகின. படத்தில் எஸ்.ஜே சூர்யா காவல் அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் கடந்த மாதம் முடிவடைந்தது. தமிழ்நாட்டில் இப்படத்தின் திரையரங்க விநியோக உரிமையை 5 ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் 'வீர தீர சூரன்' படத்தின் டீசர் நாளை(09.12.2024) மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intha #Kaali oda sambavathuku time kurichaachu@chiyaan 's #VeeraDheeraSooran teaser releasing tomorrow at 6 PM! ⚡✨An #SUArunkumar PictureA @gvprakash musicalProduced by HR Pictures , @riyashibu_@iam_SJSuryah #surajvenjaramoodu @officialdushara @thenieswarpic.twitter.com/NZNa9Fs8T1

— HR Pictures (@hr_pictures) December 8, 2024
Read Entire Article