`வீர தீர சூரன்'- தியேட்டரில் ரசிகர்கள் மோதல்

1 month ago 7

ராமநாதபுரம் ,

விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் படம் நேற்று காலை 9 மணிக்கு ரிலீஸ் ஆக இருந்தது. முதல் ஷோவுக்கான டிக்கெட் எடுத்த ரசிகர்கள் காலை 7 மணி முதல் தியேட்டர்களில் குவிந்தனர். கோர்ட்டு உத்தரவு காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த சூழலில், ராமநாதபுரத்தில் விக்ரமின் 'வீர தீர சூரன்' படம் பார்க்க தியேட்டர் வந்த ரசிகர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டநிலையில், போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.

ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தியேட்டரில் 'வீர தீர சூரன்' படம் பார்க்க குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது ரசிகர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கோஷ்டி மோதலாக மாறியது.

இதில் ரசிகர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Veera Dheera Sooran | யார் `வீர தீர சூரன்'..? தியேட்டரில் வெடித்த ரசிகர்கள் மோதல் -பரபரத்த ராம்நாடு#veeradheerasooran #ramanathapuram #tnpolice pic.twitter.com/KsIUZjRBQY

— Thanthi TV (@ThanthiTV) March 27, 2025
Read Entire Article