பாக். - ராஜஸ்தான் எல்லையில் பதற்றம்: ரெயில் சேவையில் மாற்றம்

8 hours ago 3

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்த டிரோன்களை இந்திய விமானப்படை நடுவானில் அழித்தது. ராஜஸ்தான் எல்லை பகுதியிலும் இந்திய-பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து ராஜஸ்தானில் ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராஜஸ்தானின் பகத் கி கோத்தி - பார்மர், பார்மர் - முனாபாவ் ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜோத்பூர் - தாதர், ஜோத்பூர் - வாரணாசி எக்ஸ்பிரஸ் ஜோத்பூரில் இருந்து காலை 8.25 மணிக்குப் பதிலாக காலை 11.25 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து ராஜஸ்தானில் 10க்கும் மேற்பட்ட ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தற்காலிக ரத்து மட்டுமே, சூழ்நிலை தொடரும் பட்சத்தில் மேலும் சில ரெயில்கள் ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article