
சென்னை,
சித்தா பட இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'வீர தீர சூரன் 2'. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷாரா விஜயன், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் 'காளி' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இப்படம் மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன் 2' படம் பல தடைகளை தாண்டி நேற்றுமுன்தினம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படம் முதல் நாளில் மட்டும் ரூ 3.25 கோடிவசூலித்துள்ளது. இதுவரை ரூ.27 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் படம் எப்படி உருவாக்கப்பட்டது என்பதை காட்டும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.