
ஸ்ரீநகர்,
இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வந்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.
அதேவேளை, இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று அறிவித்தார். மேலும், இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. ஆனால், ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நேற்று இரவு காஷ்மீர் மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் ஆர்எஸ் புரா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப்பகுதியில் நேற்று இரவு பாகிஸ்தான் ப்டையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் பிஎஸ்எப் (எல்லைப்பாதுகாப்புப்படை) சப் இன்ஸ்பெக்டர் முகமது இம்தியாஸ் வீர மரணமடைந்தார்.