வீட்டை ஜப்தி செய்ததால் பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

3 months ago 21

திருச்செங்கோடு,

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியை சேர்ந்த பாண்டுரங்கன், வீட்டின் பேரில் ராஜ்குமார் என்பவரது மேலாளர் பாஸ்கரன் என்பவரிடம் 15 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி செலுத்தாத நிலையில், பாஸ்கரன் தன் பெயரில் இருந்த பவரை பயன்படுத்தி, டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினரின் பெயரில் வீட்டை கிரையம் செய்து கொடுத்துள்ளார்.

இந்த பத்திரத்தை வைத்து ராஜ்குமாரின் குடும்பத்தினர் வங்கியில் வீட்டின் மீது கடன் வாங்கியுள்ளனர். கடனை திருப்பி கட்டாததால் கோர்ட்டு மூலம் வங்கி எடுத்த நடவடிக்கையின் பெயரில் அதிகாரிகள் பாண்டுரங்கனின் வீட்டுக்குச் சென்று ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தகவலறிந்து வந்த பாண்டுரங்கன் , கோர்ட்டில் 15 நாள் கால அவகாசம் கேட்டு வாங்கி இருப்பது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுக்கவே, உள்ளே சென்ற பாண்டுரங்கன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட அதிகாரிகள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Read Entire Article