ரெயில் சுரங்கப் பணிகளுக்கும், சாலை பள்ளத்திற்கும் தொடர்பு இல்லை - சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம்

4 hours ago 2

சென்னை,

சென்னையில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை தரமணி-திருவான்மியூர் சாலையில் டைடல் பார்க் அருகே இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்த நிலையில், காரில் இருந்த கைக்குழந்தை உட்பட 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது .இதனால் தரமணி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் , மெட்ரோ ரெயில் பணிகளால் சாலையில் பள்ளம் ஏற்பட்டதாக தகவல் பரவி வந்தது . இந்த தகவலுக்கு மெட்ரோ ரெயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரெயில் சுரங்கப் பணிகளுக்கும், சாலை பள்ளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது .

Read Entire Article