
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இவர் 'புஷ்பா-2' படத்தில் போட்ட குத்தாட்டம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தது. இதையடுத்து கார்த்திக் ஆர்யன் ஜோடியாக புதிய இந்தி படத்தில் அவர் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.
பான் இந்தியா அளவில், 'சென்சேஷனல்' நடிகையாக மாறி போயிருக்கும் ஸ்ரீலீலா தற்போது, ராதா கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் 'ஜூனியர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகனாக கீரித்தி ரெட்டி நடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ஜூலை 18-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 19-ந் தேதி பர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.