வீட்டு வசதித் திட்டத்தில் அதிக பயனாளிகளை சேர்க்க அமைச்சர் கணேசன் உத்தரவு

6 months ago 19

சென்னை,

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு அல்லது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளை சொந்தமாக ஒதுக்கீடு பெறுவதற்கு ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்த வீட்டுவசதி திட்டம் கட்டுமானத் தொழிலாளர்கள் பயனடையும் வகையில், அதிகளவில் பயனாளிகளை மாவட்டம் தோறும் சேர்க்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அமைச்சர் கணேசன் அறிவுறுத்தினார்.

Read Entire Article