வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட இடங்களில் வசிப்பவர்களுக்கு நிலத்தை விடுவிப்பது குறித்து ஆராய 2 பேர் குழு - அமைச்சர் தகவல்

6 hours ago 2

சென்னை: வீட்டு வசதி வாரி​யத்​தால் எடுக்​கப்​பட்ட நிலங்​களின் உண்மை நிலை அறியாமல் அதை வாங்கி குடி​யிருப்​பவர்​களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அந்த நிலத்தை விடு​விப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு​பெற்ற 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமை​யில் குழு அமைத்​துள்ள​தாக​வும், இக்குழு அளிக்​கும் பரிந்​துரை​யின்​பேரில் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்றும் அமைச்சர் சு.முத்​துசாமி தெரி​வித்​துள்ளார்.

இதுகுறித்து, அமைச்சர் சு.முத்​துசாமி நேற்று கூறிய​தாவது: வீட்டு​வசதி வாரி​யத்​தின் சார்​பில் 40 ஆண்டு​களுக்கு முன் இடங்கள் எடுக்​கப்​பட்டு, ஆரம்​பகட்ட பணியாக அதற்கான நோட்​டீஸ் மட்டும் வழங்​கப்​பட்​டுள்​ளது. அதன்பின் எந்த நடவடிக்கை​யும் அதில் எடுக்​கப்படவில்லை. இதுகுறித்த மனுக்கள் வந்த​போது, மக்​களுக்கு ஏற்பட்​டுள்ள சிரமங்களை சரிசெய்ய முதல்வர் ஸ்​டா​லின் உத்தர​விட்​டார்.

Read Entire Article