வீட்டு கதவின் பூட்டை உடைத்து திருடனை கைது செய்த போலீஸ்: முகப்பேரில் அதிகாலை பரபரப்பு

3 hours ago 3

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள தமிழ்நாடு ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் பதுங்கியிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த வீட்டின் உரிமையாளர் கென்னடி (48) என்பவருக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர். அப்போது அவர் நான், புதுக்கோட்டையில் உள்ளேன். நான் வருவதற்குள் அந்த நபர் தப்பிவிடுவார். எனவே, போலீசாருக்கு தகவல் கொடுத்து அந்த நபரை பிடித்து கொடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு அந்த வீட்டு கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டுபோலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஜெ.ஜெ.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

பின் ஜெ.ஜெ.நகர் தீயணைப்புத்துறையினரும் வரவழைக்கப்பட்டு வீட்டு கதவின் உள் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த திருடனை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரை காவல்நிலையம் அழைத்துசென்று விசாரணை செய்ததில், கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (27) என்பதும் இவர் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தாம்பரம் பகுதியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகளை திருடிய வழக்கு சம்பந்தமாக மணிமங்கலம் போலீசார் தேடி வந்துள்ளனர். இதையடுத்து அவரை மணிமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

The post வீட்டு கதவின் பூட்டை உடைத்து திருடனை கைது செய்த போலீஸ்: முகப்பேரில் அதிகாலை பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article