ரூ.18 லட்சத்தில் திறந்த வெளி கிணறு குடிநீர் பணிகளை எம்பி, எம்எல்ஏ ஆய்வு பர்வத மலை அடிவாரத்தில்

8 hours ago 2

கலசபாக்கம், மே 17: கலசபாக்கம் பர்வத மலையில் 2006 ம் ஆண்டு திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது அப்போதைய கலெக்டர் ராஜேந்திரன் முயற்சியால் மலை அடிவாரத்தில் திறந்த வெளி கிணறு அமைக்கப்பட்டு பாதி மண்டபம் வரை குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது பக்தர்களுக்கு சீரான குடிநீர் வழங்கிட பச்சையம்மன் கோயில் அருகில் இந்து சமய அறநிலைத்துறை மூலம் ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திறந்தவெளி கிணறு அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அவர் கூறியதாவது: தற்போது பாதி மண்டபம் வரை பக்தர்களின் வசதிக்காக குடிநீர் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதாரம் கழிவறை வசதி மின்விளக்கு வசதி செய்து தர தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் விரைவில் பாதி மண்டபத்தில் இருந்து மலை உச்சி வரை குடிநீர் சுகாதாரம் கழிவறை மின்விளக்கு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆய்வின்போது ஒன்றிய திமுக செயலாளர் சுப்பிரமணியன், சிவக்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post ரூ.18 லட்சத்தில் திறந்த வெளி கிணறு குடிநீர் பணிகளை எம்பி, எம்எல்ஏ ஆய்வு பர்வத மலை அடிவாரத்தில் appeared first on Dinakaran.

Read Entire Article