
நடிகை பிரியங்கா சோப்ரா பிரபல ஹாலிவுட் பாடகரான நிக்ஜோனாசை திருமணம் செய்து கொண்டு லாஸ்ஏஞ்சல்சில் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் பாலிவுட், ஹாலிவுட்டில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டியில், துணி துவைப்பது எனக்கு கடினமாக இருக்கிறது. என் மாமியார் துணிகளை எப்படி துவைப்பது என்று கற்றுக் கொடுத்தார். அதோடு என் துணிகளை அவர்தான் துவைக்கவும் செய்தார்.
துணிகளை இஸ்திரி செய்து மடிப்பது எளிது. ஆனால் அவற்றை துவைப்பது மிகவும் கடினம். 2000-ம் ஆண்டில் நான் உலக அழகி பட்டம் வென்ற போது என் மாமியார் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்ததாக சொன்னார். இவ்வாறு பிரியங்கா சோப்ரா கூறினார்