
காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோவில் குடமுழுக்கு விழா முன் தினம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கூறுகையில், 2 ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்சினையை ஒரே நாளில் தீர்த்துவிடமுடியாது. அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடித்துள்ளனர். முதல்-அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது என்பதால் மக்களோடு மக்களாக தரிசித்தேன் என்றார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருத்தம் தெரிவித்ததாக செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
வல்லக்கோட்டை கோவில் விவகாரம் பற்றி அமைச்சர் சேகர்பாபு வருத்தம் தெரிவித்தார். நல்லாட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய அதிகாரிகளுக்காக அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். இத்துடன் இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்' என்றார்