மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின்போது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய எடப்பாடி பழனிசாமி

5 hours ago 1

தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ளார். சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி பிரசார வாகனத்தில் நேற்று கோவை மாவட்டத்தில் சாய்பாபா காலனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரை வழிநெடுகிலும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் வரவேற்றனர். அப்போது, அதிமுக தொண்டரின் 3 மாத பெண் குழந்தைக்கு லலிதா என்று எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார்.

Read Entire Article