வீட்டின் கதவை உடைத்து 3.5 பவுன், பணம் திருட்டு

4 hours ago 2

திருச்செங்கோடு,ஜன.19: திருச்ெசங்கோடு அருகே, வீட்டின் பின் கதவை உடைத்த மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த 3.5 பவுன் நகை மற்றும் ₹15 ஆயிரத்தை திருடிச்சென்றனர். திருச்செங்கோடு அடுத்த குமாரமங்கலம் நாடார் தெருவைச் சேர்ந்தவர் கவிதா(50). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி, கோவையில் வசித்து வரும் தனது மகன் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை, கவிதா தனது வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பின் கதவு உடைத்து திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 3.5 பவுன் நகைகள் மற்றும் ₹15 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன்கள் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து கவிதா திருச்செங்கோடு புறநகர் போலீசில் புகார செய்தார். அதன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post வீட்டின் கதவை உடைத்து 3.5 பவுன், பணம் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article