30 கிலோ வெள்ளி கொள்ளை: சம்பவத்தில் 3 பேர் கைது

3 hours ago 2

சேலம், ஜன.19: சேலம் அம்மாபேட்டையில் 30 கிலோ வெள்ளி கொள்ளையில் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 கிலோ வெள்ளி மீட்கப்பட்டது. சேலம் பொன்னமாபேட்டை ெதற்கு ரயில்வே லைனை சேர்ந்தவர் கணேசன் (40). அவரது நண்பர் மல்லிசெட்டி தெருவை சேர்ந்த நடராஜன் (48). இவர்கள் இருவரும் சேர்ந்து வெள்ளி சராப் கடை வைத்து நடத்தி வருகின்றனர். கடந்த 6ம்தேதி கடையை பூட்டிவிட்டு சென்றனர். மறுநாள் காலையில் பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 30 கிலோ வெள்ளி தகடு, தூள், கம்பி பொடி மற்றும் ₹90 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றுவிட்டனர்.

அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக பொன்னம்மாபேட்டை அண்ணாநகரை சேர்ந்த பிரபு(40), கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி.காலனியை சேர்ந்த மணி(எ)குள்ளமணி(35), களரம்பட்டி ஆட்டோ ஸ்டேண்ட் நேதாஜி நகரை சேர்ந்த ராஜா(49) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொள்ளைக்கு பிரபு தான் தலைவனாக இருந்துள்ளார்.இவர் திருட்டுபோன வெள்ளிக்கடைக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது உரிமையாளர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடையில் அதிகமான எடையில் வெள்ளி பொருட்கள் இருப்பதை தெரிந்து கொண்டு நண்பர்கள் மூலம் கொள்ளையடித்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 20 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இன்னொரு கூட்டாளி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post 30 கிலோ வெள்ளி கொள்ளை: சம்பவத்தில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article