வீடு புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: வாலிபர் கைது

1 month ago 10

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வடக்கு மூனாண்டிபட்டியை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது 23). நேற்று முன்தினம் இரவு இவர், ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த 55 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். அவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து, பெரியகருப்பனை பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிப்பட்டி மகளிர் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அந்த பெண், போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியகருப்பனை கைது செய்தனர். 

Read Entire Article