
லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்று வரும் 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும், எய்டன் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் எஷன் மலிங்கா 2 விக்கெட்டுகளும், ஹர்ஷ் துபே, நிதிஷ் ரெட்டி மற்றும் ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த ஆட்டத்தில் ஹர்ஷல் படேல் கைப்பற்றிய விக்கெட் ஐ.பி.எல். தொடரில் அவரது 150-வது விக்கெட்டாக பதிவானது. இந்த 150 விக்கெட்டுகளை அவர் 2,381 பந்துகளில் வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. ஹர்ஷல் படேல் - 2,381 பந்துகள்
2. லசித் மலிங்கா - 2,444 பந்துகள்
3. சாஹல் - 2,543 பந்துகள்
4. பிராவோ - 2,656 பந்துகள்
5. பும்ரா - 2,832 பந்துகள்