வீட்டின் சுவர் ஏறி குதித்து, கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை - 60 வயது மூதாட்டி கைவரிசை

4 hours ago 2

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வளையாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. கடந்த 2 நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளார். இதனால், வீட்டில் யாரும் இல்லை என தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்றுள்ளனர்.

வீட்டின் உள்ளறையில் பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.14 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளைடியத்து சென்றுள்ளனர். வீடு திரும்பிய முனுசாமி, கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதுபற்றி வாணியாம்பாடி கிராம போலீசாரிடம் அவர் புகார் தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி போலீசார், தடய அறிவியல் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர். இதில், பக்கத்து வீட்டில் இருந்த 60 வயது மூதாட்டி, முனுசாமி வீட்டில் யாரும் இல்லை என தெரிந்து கொண்டு, வீட்டின் சுவர் ஏறி குதித்து, உள்ளே சென்று 20 சவரன் நகைகள் மற்றும் 14 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து உள்ளார்.

அதனை நகை கடைக்கு சென்று அடகு வைத்து, ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் பணமும் பெற்றுள்ளார். பகலிலேயே நடந்த இந்த சம்பவத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை சிறையில் அடைத்தனர்.

Read Entire Article