
மும்பை,
பிரபல பாலிவுட் முன்னணி நடிகை ஷில்பா ஷிரோத்கர். இவர் 1992-ல் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் ஆவார். இவர் ஜெய் ஹிந், கஜ கஜினி, சிந்து உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு சல்மான் கான் முன்னிலையில் நடிந்த பிக்பாஸ் சீசன் 18-ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இந்த நிலையில், நடிகை ஷில்பா ஷிரோத்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை பகிர்ந்துள்ளார். அதில், "வணக்கம் மக்களே! எனக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, "பாதுகாப்பாக இருங்கள் மற்றும் முகமூடிகளை அணியுங்கள்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.