'விஷால் சிங்கம் மாதிரி திரும்ப வருவார்...'-உணர்ச்சிவசப்பட்டு பேசிய ஜெயம் ரவி

3 weeks ago 8

சென்னை,

நடிகர் விஷால் சில தினங்களுக்கு முன்பு 'மதகஜராஜா' பட விழாவில் பங்கேற்றபோது மேடையில் கைகள் நடுங்கின. பேசவும் தடுமாறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விஷாலுக்கு என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இதையடுத்து விஷாலுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகவும், இதற்காக டாக்டரை பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், விஷால் சிங்கம் மாதிரி திரும்ப வருவார் என்று நடிகர் ஜெயம் ரவி உணர்ச்சிவசப்பட்டு பேசி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,

'விஷாலை விட ஒரு தைரியசாலி யாரும் கிடையாது. அவருக்கு ஒரு கெட்ட நேரம் என்று சொல்லலாம். அவருடைய தைரியம் அவரை காப்பாற்றும். அவருடைய நல்ல மனசுக்கு கூடிய விரைவில் சிங்கம் மாதிரி திரும்ப வருவார்.

அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை. நடிகர் சங்கத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்புதான் கிடைத்தது. விஷாலுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் 2 காட்சிகள் என்றால் கூட நடிப்பேன்' என்றார்.

Read Entire Article