விஜய் ஆண்டனிக்கு உள்ள வித்தியாசமான பழக்கம்.. அவரே சொன்ன விளக்கம்!

4 hours ago 1

சென்னை,

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்த விஜய் ஆண்டனி, புதுமையான, புரியாத மற்றும் கேள்விப்படாத வார்த்தைகளை பாடல்களில் சேர்த்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். `நான்' படம் மூலமாக நடிகராக அடையாளம் பெற்ற இவர், அடுத்தடுத்து `சலீம்', `பிச்சைக்காரன்', `சைத்தான்', `எமன்' என வெற்றி படங்களை கொடுத்தார். `கொலை', `ரத்தம்', `ஹிட்லர்' வரிசையில் சமீபத்தில் நடித்த `மார்கன்' படமும் வெற்றி பெற்றுள்ளது. இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனியின் நடிப்பில் சக்தித் திருமணம் அடுத்து வர உள்ளது.

அண்மையில் வெளியான விஜய் ஆண்டனியின் மார்கன் திரைப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25-வது படமான சக்தித் திருமகன் திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, விஜய் ஆண்டனி அளித்த பேட்டி ஒன்றில் சமீப காலமாக செருப்பு அணியாமல் இருப்பது ஏன் என்பது பற்றி பேசியிருக்கிறார். விஜய் ஆண்டனி கூறியதாவது:-

உண்மையை சொன்னால், இவன் பெரிய நல்லவன் என்று பேசுவார்கள். அதை நான் விரும்பவில்லை. இதை பெருமைக்காக நான் செய்யவில்லை. விழாக்களில் மாலை, சால்வை, பூங்கொத்துகளை நான் வாங்கவே மாட்டேன். என்னை புகழ்வதற்காக நான் எதையும் செய்யமாட்டேன். எனக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கைக்கு நான் நிறைவாக இருக்கிறேன். செருப்பு கழற்றி வெறும் காலுடன் நடக்கும்போது மனது நிறைவாக இருக்கிறது. இந்த பூமிக்கும் நமக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.

ஒரு பிரபலம் என்பதால் விமான பயணம், ஏ.சி. காற்றில் உறக்கம், பங்களா வீடு என ஆடம்பரம் நம்முடனேயே ஒட்டிவிடுகிறது. ஆசைப்பட்டாலும் அதை விட முடியாது. எனவே இதுபோன்ற விஷயங்களில் (செருப்பு அணியாமல் இருப்பது) என்னை ஈடுபடுத்தி என் மனதை பக்குவப்படுத்தி கொள்கிறேன். அவ்வளவுதான். அதேபோல வெப்பம் நிறைந்த பகுதிகளிலும், முட்கள் உள்ள காட்டுப்பகுதிகளில், மலைப்பகுதிகளில் செருப்பு அணிந்துகொள்கிறேன். மற்ற நேரங்களில் வெறுங்காலுடன் நடக்கிறேன்.` சக்தித் திருமகன்'. அரசியல் கலந்த ஆக்ஷன் - திரில்லர் படம். ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்து காத்திருக்கிறது" என்றார்.

Read Entire Article