
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை துணிச்சலுடன் எதிர்த்து போராடி இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வீரரும், காட்டாலங்குளத்து மாமன்னருமான அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்ததினம் இன்று.
தாய் மண்ணின் உரிமைக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் இறுதி மூச்சு வரை போராடி வீரமரணமடைந்த மாவீரர் அழகுமுத்துகோன் அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.