விவசாயிகள் மகிழ்ச்சி சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தி மின் மோட்டார் பயன்படுத்த அறிவுறுத்தல்

2 months ago 10

ஈரோடு, டிச. 18: பகலில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான சூரிய ஒளியை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தலாம். இதன் மூலமாக பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதுடன் மற்ற வளங்களை கொண்டு மின் ஆற்றலை தயாரிக்கும் போது ஏற்படும் மாசுபாட்டின் அளவை குறைத்திட முடியும். எனவே, நமது நாட்டை பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேற்றும் நோக்கில் பகலில், அதிக அளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தி, அனைத்து விவசாயிகளும் தங்களது மின் மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்தி பயன்பெறுமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

The post விவசாயிகள் மகிழ்ச்சி சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்தி மின் மோட்டார் பயன்படுத்த அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article