சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் X தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் கோடை வெப்பம் கடந்த சில நாட்களாக சுட்டெரித்து வந்தது. அதேநேரம், சில இடங்களில் கோடை மழையும் காணப்பட்டது. இந்த சூழலில், கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் ‘கத்திரி’ வெயில் தொடங்கியது. பொதுவாக, அக்னி நட்சத்திரம் காலக்கட்டத்தில், தமிழகத்தில் வெயில் உக்கிரமாக காணப்படும். ஆனால், அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது.
அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இருந்து சில நகரங்களில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இனி வரும் நாட்களிலும் தமிழகத்தில் மழை பொழிவுக்கே அதிகளவு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, இந்த ஆண்டு கோடை வெப்பம் முடிவுக்கு வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் X தளத்தில் பதிவிட்டுள்ளார். கடல் காற்று வீசும் என்பதால் வெப்பநிலை தணிந்து சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும். கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, தி.மலை, விழுப்புரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
The post சென்னையில் குளிர்ச்சியான சூழல் நிலவும்: பிரதீப் ஜான் X தளத்தில் பதிவு! appeared first on Dinakaran.