விழுப்புரம்: சக்கரம் கழன்று ஓடியதால் நடுவழியில் நின்ற அரசு பஸ்

4 weeks ago 6

விழுப்புரம்,

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சொந்தமான அரசு பஸ் ஒன்று நேற்று கள்ளக்குறிச்சியில் இருந்து புறப்பட்டு கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. கடலூர் அருகே தோப்புக்கொல்லை பகுதியை சேர்ந்த தனசேகரன் (வயது 50) என்பவர் பஸ்சை ஓட்டினார். பண்ருட்டி அருகே பத்திரக்கோட்டையை சேர்ந்த குபேரசந்திரன் (30) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார். விடுமுறை நாள் என்பதால் பஸ்சில் குறைந்த அளவிலேயே பயணிகள் இருந்தனர்.

தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் பகுதியில் வந்தபோது திடீரென பஸ்சின் இடது புற முன் பக்க சக்கரம் கழன்று சாலையில் ஓடியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறு மாறாக ஓடியதால் பயணிகள் அனைவரும் கூச்சல் எழுப்பினர். சுமார் 20 மீட்டர் தூரம் சென்ற நிலையில் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு சாலையோர தடுப்பு சுவரை அணைத்தபடி பஸ்சை நிறுத்தினார்.

இதனால் பஸ்சில் வந்த 28 பயணிகளும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பிரிதிவிமங்கலம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Read Entire Article