இந்தியாவில் ரூ.12,800 கோடி முதலீடு செய்த பாக்ஸ்கான் நிறுவனம்

5 hours ago 4

புதுடெல்லி,

ஆப்பிள் போன் உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான் இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தை சென்னை அருகே அமைத்து உலக நாடுகளுக்கு ஆப்பிள் போன்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது. 2024-25 நிதியாண்டில் பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் தனது வருவாயை இரட்டிப்பாக்கி சுமார் ரூ.1.7 லட்சம் கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தனது யூழான் டெக்னாலஜி நிறுவனத்தில் கடந்த 5 நாட்களில் ரூ.12 ஆயிரத்து 800 கோடியை முதலீடு செய்து உள்ளது.

Read Entire Article