சென்னை: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு அடி உதை

3 hours ago 3

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர், சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் வீட்டில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வடமாநில வாலிபர் ஒருவர், கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவி கூச்சல் போட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து, சரமாரியாக அடித்து உதைத்து வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுனில் ஜமாத் (24 வயது) என்பதும், வில்லிவாக்கத்தில் தங்கி, கட்டிட வேலை செய்து வருவதும் தெரிந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், சுனில் ஜமாத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read Entire Article