விழுப்புரம் அருகே மகளிர் சுயஉதவிக்குழு பெண்களிடம் ₹4.66 லட்சம் பணம் மோசடி

2 hours ago 1

*தலைவி மீது எஸ்பியிடம் பரபரப்பு புகார்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் கட்டிய பணம் ரூ.4.66 லட்சத்தை மோசடி செய்த தலைவி மீது எஸ்பியிடம் பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டது.விழுப்புரம் அருகே பெரும்பாக்கத்தை சேர்ந்த மீரா உள்ளிட்ட மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் நேற்று எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2019ம் ஆண்டு பெரும்பாக்கம், பெரியகுளம் பகுதியில் ஒரு மகளிர் சுயஉதவிக்குழுவை தொடங்கினர். தலைவி, துணை தலைவி சேர்ந்து 20 பேர் கொண்டு சங்கம் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் மகளிர் சுயஉதவிக்குழுவுக்காக வங்கியில் 20 பேருக்கும் ரூ.5 லட்சம் கடனாக கொடுத்தனர். அதில் தலைவி, அனைவருக்கும் உள்ள அவரவர் வங்கிக்கணக்குக்கு ரூ.20,000ம், தலைவி கணக்கில் ரூ.33,000, துணைத்தலைவிக்கு ரூ.32,000 தொகையும் செலுத்தப்பட்டு மாதம் ரூ.1,550 வீதம் 24 மாதங்கள் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கடன் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் நாங்கள் அனைவரும் மாதம் ரூ.1,550 வீதம் 2 வருடங்கள் கட்டியுள்ளோம். அதன்பிறகு பணம் கட்டியதற்கான என்ஓசி சான்றிதழை தலைவியிடம் கேட்டபோது வங்கியிலிருந்து கொடுக்கவில்லை என்று கூறினார். பின்னர் குழுவில் உள்ள இருவர் அந்த வங்கிக்கு சென்று கணக்கில் பணம் எடுக்க முயன்ற போது கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் பணம் எடுக்க முடியாாது என்று கூறியுள்ளனர்.

தலைவியிடம் கேட்ட போது எனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டு சென்றார். பின்னர்தான் மகளிர் குழு கடன் பணத்தை வங்கியில் கட்டவில்லை என்றும், அதனால்தான் வங்கி கணக்கு லாக் ஆகிவிட்டதாக அதன் மேலாளர் தெரிவித்தார்.

மொத்தம் எங்கள் குழுவில் ரூ.4,66,992 பணம் கட்டவில்லை என்று கூறிய போது, நாங்கள் மாதந்தோறும் ரூ.1,550 பணத்தை 24 மாதங்கள் கட்டியதாக தெரிவித்தோம். வங்கி மேலாளர் எங்களிடம் கட்டவில்லை என்றும், தலைவியிடம் சென்று கேட்குமாறும் தெரிவித்தார்.

தொடர்ந்து தலைவியிடம் சென்று கேட்ட போது பணத்தை நான் தான் எடுத்து கொண்டேன், உங்கள் பணத்தை கட்டவில்லை என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்று மிரட்டல் விடுத்தார். எனவே எங்கள் பணத்தை ஏமாற்றி மோசடி செய்த மகளிர் சுயஉதவிக்குழு தலைவி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post விழுப்புரம் அருகே மகளிர் சுயஉதவிக்குழு பெண்களிடம் ₹4.66 லட்சம் பணம் மோசடி appeared first on Dinakaran.

Read Entire Article