மார்த்தாண்டம், ஜன.6: விளவங்கோடு ஊராட்சிக்குட்பட்ட ஈத்தவிளையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீன், காய்கறி வியாபாரம் செய்ய கொட்டகை அமைக்க ஊராட்சி நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கொட்டகை அமைக்கும் பணி முடிவுற்று நேற்று திறப்பு விழா நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் லைலா ரவிசங்கர் தலைமை வகித்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொட்டகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி உறுப்பினர்கள் எட்வின் ராஜ், விஜயகுமாரி, ஷீலா, ஸ்டான்லி மற்றும் சுரேஷ், ஜோஸ், ராஜ்குமார், மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post விளவங்கோடு ஊராட்சியில் மீன் வியாபார கொட்டகை திறப்பு appeared first on Dinakaran.