பொன்னமராவதி.மே 17: பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்யும் ஜமாபந்தி இரண்டாவது நாளாக அரசமலை பிர்காவிற்கு நடந்தது. 84கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர் வாயம் ஜமாபந்தி பசலி 1434 நேற்று முன்தினம் 15ம் தேதி காரையூர் பிர்காவிற்கு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று 16ம்தேதி இரண்டாவது நாளாக. ஜமாபந்தி அலுவலர் புதுக்கோட்டை சமூகப்பாதுகாப்பு திட்ட தனித்துணைஆட்சியர் சோபா தலைமையில் நடைபெற்றது. நேற்று அரசமலை பிர்காவிற்கு பகுதியில் உள்ள அரசமலை, வாழைக்குறிச்சி, நல்லூர், செவலூர்,சுந்தரம், மேலமேலநிலை, நெறிஞ்சிக்குடி, மூலங்குடி ஆகிய உள்வட்டங்களின் வருவாய்க்கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து 84 கோரிக்கை மனுக்கள் பெற்றார். பின்னர் வருவாய் கணக்குகளை ஆய்வு செய்தார். முன்னதாக தாலுகா அலுவலகம் முன்பு கிராஸ் ஸ்டாப் செய்தார். இதில் தாசில்தார் சாந்தா தனி தாசில்தார் பழனிச்சாமி தாலுகா நிலஅளவை துணை ஆய்வாளர் ராஜேஸ்கண்ணன், துணைத்தாசில்தார்கள் சேகர்,திலகம், திருப்பதி வெங்கடாசம்,வருவாய் ஆய்வாளர்கள் சரேஷ்குமார், அங்குலெட்சுமி, பிருந்தா விஏஓக்கள் பாண்டியன், பழனிச்சாமி, சண்முகம், ஜெயந்தி, வேளாண்மை உதவிஇயக்குனர் ரஹ்மத்நிஸாபேகம், பேரூராட்சி செயல்அலுவலர் அண்ணாத்துரை உட்பட பலர் கலந்துகொண்டனர். வரும் 20ம் தேதி பொன்னமராவதி பிர்காவிற்கு ஜமாபந்தி நடக்கின்றது.
The post அரசமலை ஜமாபந்தியில் 84 மனுக்கள் பெறப்பட்டது appeared first on Dinakaran.