விராலிமலை, மே.17:குடி தண்ணீர் கேன் சப்ளை செய்யும் லட்சுமணன் என்பவரின் மகள் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை. ஆசிரியர்கள்,சக மாணவிகள் பூர்விகாவை கட்டியணைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் இவர் கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படித்த போது சிறார் திரைப்பட விழாவில் தேர்ச்சி பெற்று தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கல்வி சுற்றுலாவிற்கு ஜப்பான் வரை சென்று வந்தவர் அப்போது ஜப்பான் சென்று வந்தது தொடர்பாக தினகரன் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் தனது தந்தை தன்னை பள்ளியில் சேர்க்கும் போது இடது புறம் தனியார் பள்ளி உள்ளதாகவும், வலது புறம் அரசு பள்ளி உள்ளதாகவும் நீ எதை தேர்ந்தெடுக்கிறாய் என்று கேட்டார் நான் வலது புறம் உள்ள அரசு பள்ளியை தேர்ந்தெடுத்தேன் அன்று நான் எடுத்த சரியான முடிவால் ஜப்பான் வரை சென்று வந்ததாக கூறிய அவர் இன்று, அன்று அளித்த அதே பேட்டியை நினைவு கூர்ந்து அரசு பள்ளி என்பதால் மட்டுமே இந்த நிலையை என்னால் எட்ட முடிந்தது என்று கூறினார்.
மேலும் பேசிய பூர்விகா,அரசு பள்ளியில் பயில்பவர்கள் பல்வேறு சாதனைகளை செய்து வரும் இந்த வேலையில் நானும் அவர்களுடன் இணைந்து மாவட்டத்தில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி என்றும்.. தனியார் பள்ளியில் படித்திருந்தால் இந்த இடத்தை அடைந்து இருப்பேனோ என்ற சந்தேகம் எனக்கு உள்ளது என்றும். இரவில் தான் வெகு நேரம் படிப்பேன் என்றும்.. ஆசிரியர்கள் தொடர்ந்து தேர்வுகள் நடத்தி மாணவிகளை தயார் படுத்தினர் என்றும்.. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கிடைத்த இந்த பெருமை என் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட அரசுக்கும் பங்கு இருப்பதாக பெருமிதத்துடன் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள அன்னவாசல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவி எல் .பூர்விகா நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.இவர் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சதம் அடித்துள்ளார்.மேலும், தமிழ் -99,ஆங்கிலம்-99.கணிதம்-97 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதுகுறித்து பேசிய பூர்விகாவின் தாய் தேன் ஆனந்தி: பூர்விகாவின் கல்வி திறனை அறிந்த புதுக்கோட்டையில் இயங்கி வரும் மாடல் பள்ளி 8 மற்றும் 9 ஆகிய வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் எவ்வித செலவும் இல்லாமல் படிக்க மாதிரி பள்ளியில் இடம் கிடைத்தும் தனது ஊருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்திலும், பூர்விகா விருப்பத்தின் பேரிலும் அன்னவாசல் அரசு பள்ளியிலிலேயே படிப்பை தொடரச் செய்தோம் என்றார். தையடுத்து,ஆசிரியர்கள்,சக மாணவிகள் மாணவி பூர்விகாவை கட்டியணைத்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். இப்பள்ளி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post அன்னவாசல் அரசு பள்ளி மாணவி சாதனை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் appeared first on Dinakaran.