மும்பை: ஹூண்டாய் மோட்டர், மாருதி சுசூகியை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கார்களின் விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார்களின் விலையை 3% வரை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இந்த விலையேற்றம் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் பணவீக்க உயர்வால் கார்களின் விலையை உயர்த்தும் முடிவுக்கு வந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. முன்னதாக அனைத்து மாடல் கார்களையும் ரூ.25,000 வரை உயர்த்த போவதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனமும், கார்களின் விலையை 4 விழுக்காடு வரை உயர்த்தப்போவதாக மாருதி சுஸுகியும் அறிவித்துள்ளது. இது தவிர மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா, ஆடி, BMW ஆகிய கார் நிறுவனங்களும் விலையை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளன.
The post விலையை உயர்த்தும் கார் நிறுவனங்கள்: டாடா மோட்டார்ஸ் கார்களின் விலையை 3% வரை உயர்த்தப்போவதாக அறிவிப்பு!! appeared first on Dinakaran.