
சென்னை,
'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைய இருக்கிறார். அட்லீ, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்க உள்ள இப்படத்தின் மீது அனைவரின் பார்வையும் உள்ளது.
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில், சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் அட்லீயை சந்தித்து இப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அல்லு அர்ஜுன் சென்னை வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று போஸ்டர் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தின் அறிவிப்பாக இது இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.