வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

5 hours ago 2

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை அடுத்த தேரிமேல்விளையை சேர்ந்தவர் தனுஷ் (வயது22), தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு 10.40 மணியளவில் 32 வயதுடைய ஒரு பெண்ணின் வீடு இருக்கும் பகுதி வழியாக சென்றார். அந்த பெண்ணின் கணவர் கோவில் திருவிழாவுக்காக சென்றிருந்தார். இதனால் அவர் கணவரின் வருகையை எதிர்பார்த்து கதவை பூட்டாமல் படுக்கை அறையில் குழந்தைகளுடன் தூங்கி கொண்டிருந்தார்.

இதை கவனித்த தனுஷ் வீட்டுக்குள் புகுந்து படுக்கை அறைக்குள் சென்றார். இதனால் கண்விழித்த பெண் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட முயன்றார். ஆனால், தனுஷ் அந்த பெண்ணின் வாயை பொத்தி பாலியல் வன்கொடுமை செய்தார். தனுசின் பிடியில் இருந்து தப்பிக்க பெண் சத்தம் போட்டார். ஆனால், அந்த பகுதியில் கோவில் திருவிழா ஒலிப்பெருக்கி வைத்திருந்ததால் பெண்ணின் சத்தம் வெளியே கேட்கவில்லை.

இந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என அப்பெண்ணை மிரட்டி விட்டு தனுஷ் அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஈத்தாமொழி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இரவு நேரம் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணின் வாயைப் பொத்தி மிரட்டி இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article