அலையில் சிக்கிய செல்லப்பிராணி நாயை காப்பாற்ற முயன்ற நபர் கடலில் மூழ்கி உயிரிழப்பு

3 hours ago 2

 

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஓசோன் கடற்கரை உள்ளது. இந்த கடற்கரைக்கு நேற்று மதியம் 2 மணியளவில் நபர் தனது செல்லப்பிராணி நாயை அழைத்து சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக செல்லப்பிராணி நாய் கடலுக்குள் சென்று அலையில் சிக்கிக்கொண்டது. இதையடுத்து அந்த நபர் நாயை காப்பற்ற கடலுக்குள் குதித்துள்ளார். அப்போது அவரை கடல் அலை இழுத்து சென்றது. தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், கடலில் மூழ்கிய நபரை மயங்கிய நிலையில் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். கடல் அலையில் சிக்கிய செல்லப்பிராணி நாய் காயங்களுடன் கரைக்கு தப்பி வந்துவந்தது. உயிரிழந்த நபரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article