விருத்தாசலம் அருகே விவசாயியிடம் நிலத்தை அளப்பதற்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

7 hours ago 2

கடலூர்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், தொரவலூர் கிராமம் அருகே ஆலமரம் தெருவை சேர்ந்த வேலாயுதம், வயது 68, பழமலை என்பவருக்கு சொந்தமான தொரவலூர் கிராமத்தில் உள்ள நிலத்தை அளந்து அத்து காட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். மேற்படி வேலாயுதம் என்பவர் நிலத்தை அளந்து காட்ட ஏற்பாடு செய்வதற்கு, தொரவலூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் R.தனசேகர், கடலூர் மாவட்டம் வேலாயுதம் என்பவரிடம் 15.05.2025 ஆம் தேதி ரூ.10,000 லஞ்சமாக கேட்டுள்ளார்.

புகார்தாரருக்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாததால் 16.05.2025 இன்று கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் மேற்படி தொரவலூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டி புகார் மனு கொடுத்துக்கொண்டார். அவரது புகார் மனு மீது கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கு.எண்.4/2025 பிரிவு, 7 of The Prevention of Corruption (Amendment) Act, 2018, படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் இன்று புகார்தாரர் வேலாயுதம் என்பவரிடம் ரூ.10,000 லஞ்சப்பணத்தை தொரவலூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் கேட்டு வாங்கியபோது அங்கு மறைந்திருந்த காவல் துணை கண்காணிப்பாளர் K.சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்ச பணம் வாங்கிய தொரவலூர் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் தனசேகர் என்பவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

The post விருத்தாசலம் அருகே விவசாயியிடம் நிலத்தை அளப்பதற்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article